அந்தப் படத்துல நடிச்சதுக்காக வருந்துகிறேன்!- யாஷிகா ஆனந்த்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘பிக் பாஸ்’ சீஸன் 2 மூலம் ஆர்மி பலத்தை அதிகரித்துக் கொண்ட யாஷிகா ஆனந்த், ‘ஜாம்பி’ படத்தின்  மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களுக்காகப்  பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவரிடம், பேட்டி என்று கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டார். ‘பிக் பாஸ்’  கிளாமர் முத்திரை, இணைய ட்ராலர்கள், ‘மீ டூ’ என்று பல விஷயங்களை 
இங்கே மனம் திறந்து பேசுகிறார்.

தொடர்ந்து பேய்ப் படங்களா நடிக்கிறீங்களே... இதுதான் உங்க ஸ்டைல்னு முடிவே பண்ணிட்டீங்களா?

முதல் கேள்வியே வில்லங்கமா கேட்டா எப்படி ப்ரோ? இப்போ நடிச்சிருக்கும்  ‘ஜாம்பி’ பேய்ப் படம் இல்லையே? அது சோம்பி படம். அடுத்தடுத்து ரிலீஸாகப் போற என் படங்கள் பெரும்பாலும் லவ் ஸ்டோரிதான். அடுத்ததா நடிகர் மகத்துடன் ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படத்துல நடிக்கிறேன். அப்புறம், தம்பி ராமையா இயக்கும்  ‘சிறுத்தை சிவா’ படத்துல குடும்பப் பாங்கான பெண் வேடத்துல நடிக்கிறேன். ஆரவ்கூட  ‘ராஜபீமா’ படத்துல வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கிறேன். இதெல்லாம் பேய்ப் படங்கள் இல்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE