சினிமா பிட்ஸ்

By காமதேனு

திருமணத்துக்குப் பிறகு திரையுலகத்தைவிட்டு ஒதுங்கி இருந்த அசின் மீண்டும் நடிக்க வருகிறார். செகன்ட் இன்னிங்ஸ்க்காக பாலிவுட் இயக்குநர்களிடம் தீவிரமாகக் கதை கேட்டு வருகிறாராம்.
விட்ட மார்க்கெட்டை... விட்ட இடத்திலேயே பிடிக்கிறாராமாம்...

முன்னணி ஹீரோக்களே ரஜினியின் பழைய படங்களின் தலைப்பின் காப்பிரைட்ஸை வாங்க வரிசையில் நிற்கும்போது, நயன்தாரா ரொம்ப ஈசியாக அதைச் சாதித்துள்ளார். அவரின் அடுத்த படத்துக்கு ‘நெற்றிக்கண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘தர்பார்’ பட ஷூட்டிங்கில் நேரடியாக ரஜினியிடமே பேசி இந்தத் தலைப்பை தட்டிவந்தாராம் நயன்தாரா.
பொண்ணுங்க கேட்டா 
தலைவரும் தட்டமாட்டார் போல...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘நரகாசுரன்’, ‘துருவ நட்சத்திரம்’ என்று அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வராமல் முடங்கிக் கிடப்பதால் கடன் தொல்லையில் சிக்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். அதிலிருந்து மீள படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கௌதம். ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கௌதம் தான் வில்லனாம்.
இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட்னாலே 
இப்படித்தான்... பிடிச்ச வேலையே அமையாது!

ராய் லட்சுமி நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல மார்க்கெட்டாம். இதையடுத்து தனது ஒருநாள் சம்பளத்தை இரண்டிலிருந்து மூன்று லகரமாக உயர்த்தி விட்டாராம் ராய்.
டோனி ரிட்டயர்டு ஆகப்போறாராமே உண்மையா மேம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE