உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைத் தக்கவைத்திருக்கும் தொடர் ‘திருமணம்’. மணவாழ் வின் மகிழ்ச்சித் தருணங்கள் தொடங்கி தவிர்க்க முடியாத சிக்கல்கள் வரை பல்வேறு விஷயங்களைப் பேசும் இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கியக் காரணம், நாயகி ஜனனியாக நடிக்கும் ஸ்ரேயா ஆஞ்சன்.
தெற்றுப்பல் சிரிப்பழகால் தெறிக்கவிடும் இந்தச் சின்னத் திரை சினேகாவை, ஆலப்பாக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன். காட்சிக்காகக் கண்ணீர் மல்க, சிலையாக நின்றிருந்தவர், இயக்குநர் ‘கட்’ சொன்னதும் கலகலச் சிரிப்புடன் பேசத் தொடங்கினார்.
தமிழ் சீரியல் ரசிகர்களைப் புன்னகையாலேயே கட்டிப்போட்டு வச்சிருக்கீங்களே..?