அஞ்சு சீன்ல வந்தாலும் அப்டியே மனசுல நிக்கணும்!- லட்சியம் சொல்லும் ‘வணக்கம் தமிழா’ அசார்

By காமதேனு

சின்னத்திரை நிகழ்ச்சிகள் சுவாரசியமாக இருப்பதற்கு நிகழ்ச்சி வடிவமைப்பு, அரங்க அமைப்பு இத்யாதிகளையெல்
லாம் தாண்டி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தனித்திறனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இளமையும் புதுமையும் வழிந்தோடும் தொகுப்பாளர்கள் வரிசையில், தனக்கென்று ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர்தான் சன் டிவி ‘வணக்கம் தமிழா’ 
நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவரான அசார். வரிசைகட்டி நிற்கும் பண்டிகைக்கால சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவரிடம் ஒரு பேட்டி:

ஆங்கரிங் பண்றதுக்காகவே அவதாரம் எடுத்தவர் மாதிரி இருக்கீங்களே... எப்படி ஆரம்பிச்சது இந்தப் பயணம்?

உண்மையைச் சொல்லட்டுமா... ஆங்கரிங் பண்றதைவிட, நடிகராகணும்ங்கிறதுதான் என்னோட கனவே. ஸ்கூல் படிக்கும்போது டிராமாவில நடிப்பேன். ‘நீ நடிகன்டா’ என்று அப்பவே எல்லாரும் உற்சாகப்படுத்துவாங்க. விஸ்காம் படிச்சா நடிப்புத் துறைக்கு வரலாமேன்னு ஆசைப்பட்டேன். கடைசியிலே பி.காம்., தான் படிக்க முடிஞ்சுது. ஆனாலும் எனக்குள்ள இருக்கிற நடிகர் அசாரை நான் விடவே இல்லை. அந்தக் கனவை உயிர்ப்போட வச்சிருந்தேன்.

சின்னத் திரைக்கு வந்தது எப்படி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE