மகாமுனி - திரை விமர்சனம்

By காமதேனு

கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகா, கிராமத்துக் குழந்தைகளை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் முனி ஆகிய இருவரின் கதையே மகாமுனி.

`மௌனகுரு' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'மகாமுனி'யுடன் வந்துள்ளார். மனித மனத்தில் இருக்கும் பேராசை, போட்டி, பொறாமை, வஞ்சம் ஆகிய குணங்களைக் கதாபாத்திரங்
களின் வழியாகச் சொன்ன விதத்தில் முத்திரை பதிக்கிறார்.

முரட்டுக் கோபம், அரசியல்வாதியின் சொல்லுக்குக் கீழ்பணிதல் ஆகியவற்றில் மகாதேவனாக தேர்ந்த நடிப்பை வெளிப்
படுத்துகிறார் ஆர்யா. நிதானம், பொறுமை, அமைதி, அடிதடி என்றாலே என்னவென்று தெரியாத அப்பாவித்தனம், பிறருக்கு உதவும் குணம், வீரம், சாதி குறித்து மாணவர்களுக்குப் புரியவைப்பது என்று முனிராஜ் கதாபாத்திரத்திலும் ஆர்யா சாந்தத்தின் வார்ப்பு.

இந்துஜா, மஹிமா நம்பியாரின் கதாபாத்திரங்கள் முழுமையடையவில்லை. பதற்றம், பயம், தவிப்பு, இயலாமை ஆகியவற்றை இந்துஜா நன்கு வெளிப்படுத்தியுள்ளார். மஹிமா புரட்சிகர பெண்ணாக சாதியைக் கடந்து இயங்குகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE