பொன்னியின் செல்வன்- நனவாகப் போகும் கனவு

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

தமிழ் வாசகப் பரப்பில், வந்தியத்தேவனின் கால் தடம் பதியாத இடங்களே இருக்க முடியாது. அறிமுக வாசகர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பலரும் கொண்டாடும் படைப்பு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல். ஐந்து தொகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பிரம்மாண்டப் படைப்பு, சோழர் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் காவியம். கரைபுரண்டோடும் காவிரியையும், பரந்துபட்ட சோழப் பேரரசின் வளமையையும் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் காட்சியுருவாக்கி, வாசகர்களை அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்றிருப்பார் கல்கி.

அப்படிப்பட்ட ஒரு பெரும் படைப்பு, தமிழ் சினிமாவில் திரைவடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக நிலவுகிறது. அந்த முயற்சியில் இறங்கியவர்களும் ஒருகட்டத்தில் பின்வாங்கிவிட்டார்கள். அனிமேஷன், குரல் பதிவுகள், காமிக்ஸ்கள் என்று வெவ்வேறு வடிவங்களில் பொன்னியின் செல்வன் வந்தாலும் வெள்ளித் திரையை எட்டவில்லையே எனும் ஏக்கம் அனைவருக்கும் உண்டு. இனி அந்தக் காத்திருப்புக்கு அவசியமில்லை. ஆம், ‘பொன்னியின் செல்வ’னை பிரம்மாண்டமான செல்லுலாய்டு சித்திரமாக்க மனது வைத்துவிட்டார் மணிரத்னம்!

கடந்து வந்த கனவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE