நெகட்டிவ் ரோல்லதான் கலக்கலாம்!- ‘ஓவியா’ புனிதா

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

வளசரவாக்கத்தில் உள்ள ஷூட்டிங் கார்டன். ‘கலர்ஸ் தமிழ்’ சேனலின் ‘ஓவியா’ நெடுந்தொடர் படப்பிடிப்பு. தழையத் தழைய கட்டிய சிவப்புப் புடவையும், புன்னகையுமாக படப்பிடிப்புத் தளத்தை வலம் வந்துகொண்டிருந்தார் புனிதா. ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே’ என்ற யோசனையுடன் அணுகினால், என் மைண்ட் வாய்ஸை கப்பென்று பிடித்துவிட்டார். “நீங்க நினைக்கிறது கரெக்ட். இதுக்கு முன்னாடி சன் டிவியின் ‘கல்யாண வீடு’ சீரியலில் என்னைப் பார்த்திருப்பீங்க” என்று அறிமுகம் கொடுத்தார். அவருடன் ஒரு பேட்டி:

என்ன, திடீர்னு வேறு சீரியலுக்குத் தாவல், சேனலும் மாறியாச்சு?

உண்மையைச் சொல்லணும்னா, ‘ஓவியா’ சீரியல்தான் என்னோட முதல் வாய்ப்பே. நான் நடிக்கலாம்னு முடிவெடுத்தப்ப, ‘ ஓவியா’ சீரியலோட ஹீரோயினுக்கான ஆடிஷன்லதான் வந்து கலந்துக்கிட்டேன். ஆடிஷனோட ரிசல்ட் வர்றதுக்குள்ளேயே, இயக்குநர் திருமுருகன் சாரோட ‘கல்யாண வீடு’ சீரியல்ல அவருக்குத் தங்கச்சியா நடிக்க வாய்ப்பு வந்தது. எங்க குடும்பத்தில எல்லோரும் அவரோட ரசிகர்கள். அதனால, உடனே சம்மதிச்சிட்டேன். அதுக்கு அப்புறம்தான் ‘ஓவியா சீரியல்ல நடிக்க நீங்க செலக்ட் ஆகிருக்கீங்க’ங்கிற தகவலே வந்தது. அப்போ அதுல நடிக்க முடியலை. இப்போ, மறுபடியும் வாய்ப்பு வந்தது. பயன்படுத்திக்கிட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE