ஸ்டன்ட் யூனியன் தேஞ்சுபோன முட்டி எலும்பா இருக்கு!-  ஆதங்கப்படும் ஆக்‌ஷன் சகோதரர்கள்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

பிரம்மாண்டமான ஆக்‌ஷன் சரவெடியாக வெளிவந்த ‘கேஜிஎஃப்’ படத்துக்காக, ‘சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பாள’ருக்கான தேசிய விருதை பெறும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள் இரட்டையர்களான அன்பறிவ். 

‘ஸ்டன்ட் மாஸ்டர்’ என்றாலே கனமான தங்கச் சங்கிலிகள், மோதிரம், முரட்டுத் தோற்றம் என்று வழக்கமான அடையாளங்கள் இன்றி சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் போல் சாதுவான தோற்றம் காட்டுகிறார்கள் இருவரும். விஷாலின் ‘ஆக்‌ஷன்' படத்தின் படப்பிடிப்பில் இந்தச் சகோதரர்களைச் சந்தித்தேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று அனைத்து மொழித் திரைப்படங்களையும் அதிரவைக்கும் இந்தச் சகோதரர்களில் ஒருவர் அன்புமணி, இன்னொருவர் அறிவுமணி. “எப்படி ஸ்டன்ட் மாஸ்டரானீங்க?” என்று கேட்டால், விறுவிறுவென்று ஃப்ளாஷ்பேக்கை விரிக்கிறார்கள் இருவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE