சினிமா பிட்ஸ்

By காமதேனு

ஹன்சிகா நடிக்கும் 'மகா' படத்தில் கவுரவ தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார். அக்டோபரில் ஷூட்டிங்கை தொடங்கலாம் என சிம்புவே சொல்லிவிட்டாராம். 'மகா மாநாடு' பட வேலையை ஆரம்பிப்பார் என்று நினைத்தால், இவர் 'மகா' படத்தில் நடிக்கப் போவதாகச் சொல்கிறாரே? என்று சிம்பு ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுதே!

நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் சந்தானத்தின் `சர்வர் சுந்தரம்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறதாம். ‘ஏ1’ படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து, இனிமேல் ஆ க்‌ஷன் படங்களை ஓரம் கட்டிவிட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சந்தானம்.
அதுதான் சரியான ரூட் தல...

`மாற்றான்' படத்துக்குப் பிறகு சூர்யா - காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் மிரட்ட வருகிறது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஆக, அஜித் தப்பிச்சிட்டாரு...

‘இந்தியன்  2’-வுக்குப் பிறகு, விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம் ஷங்கர். இது முழுக்க முழுக்க அரசியல் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். தனது அரசியல் ஆட்டத்தைத் தொடங்க இப்படம் கை கொடுக்கும் என்பது விஜயின் கணக்காம்.
ரஜினிகாந்த் கவனத்திற்கு...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE