சினிமா பிட்ஸ்

By காமதேனு

அருண் விஜயுடன் மீண்டும் கைகோக்கவுள்ளார் தான்யா ஹோப். தடம் படத்திற்குப் பிறகு கன்னட படங்களில் பிசியாக இருந்தவர், அருண் விஜய் படம் என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஜயின் அப்பா விஜயகுமார்.

`பிக் பாஸ்' வனிதா விஜயகுமாருக்கும் ஒரு வாய்ப்புக் குடுங்க பாஸ்...

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு போனி கபூரின் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் நடிக்கவுள்ளார் அஜித். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளாராம். அஜித்தின் மகள் வேடம் என்கிறார்கள். ஜான்வியைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவரது அம்மாவின் விருப்பமாம்.

ஜூனியர் மயிலே வருக... 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE