நேர்கொண்ட பார்வை - திரை விமர்சனம்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

இந்த மாதிரி பெண்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று ஓர் ஆண் ஆணவத்தோடு அத்துமீறினால், அவனுக்கு ஒரு வழக்கறிஞர் தண்டனை வாங்கிக் கொடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தந்தால் அதுவே ‘நேர்கொண்ட பார்வை'.

2016-ம் ஆண்டில் இந்தியில் ஹிட்டடித்த  ‘பிங்க்' படத்தை தமிழுக்கே உரிய சில மாற்றங்களுடன் மறு ஆக்கம் செய்துள்ளார் இயக்குநர் எச்.வினோத். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிராக சமகாலத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அவரது முயற்சிக்கும் அக்கறைக்கும் வாழ்த்துகள்.

படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம், அதிசயம் எல்லாம் அஜித்தான். வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து விலகி நின்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். அதுவும் வழக்கின் முதல் நாளில் மருந்து சாப்பிட்ட களைப்பில் குறுக்கு விசாரணை செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தடுத்து விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE