தொகுப்பாளர்களிடம் ஒரிஜினாலிட்டி இல்லை!- ‘நண்டு’ ஜெகன் திடீர் குண்டு

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

சின்னத்திரையில் ‘ரியாலிட்டி கேம் ஷோ’க்கள், சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் என்று ஒரு ரவுண்டு வந்த ‘நண்டு’ ஜெகன், சிறு இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியின் ‘இங்க என்ன சொல்லுது’ நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழ் மக்கள் முன் தலை காட்டுகிறார். ஏன் இந்த பிரேக் என்று கேட்டறிய, ஏவிஎம்-மில் ஷுட்டிங் பிரேக்கில் இருந்தவரைச் சந்தித்தேன்.

என்ன பாஸ், ஆளையே காணோம்?

எங்க போகப் போறேன்... ஒரு நடிகனுக்கு நடிக்கிறதைத் தவிர வேற என்ன வேலை இருக்கப்போகுது? நீங்க சொல்ற இந்த கேப்ல அஞ்சு படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். எந்தப் படமும் ரிலீஸாகாதது ஒரு காரணமா இருக்கலாம். இருந்தாலும், எல்லாத்துக்கும் நேரமும் காலமும் கூடி வர்றது மாதிரி இந்த மாசம் நல்ல தொடக்கமா அமைஞ்சிருக்கு. நான் நடிச்ச ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ படம் ரிலீஸ் ஆகிடுச்சு. அடுத்ததா இதோ, கலைஞர் டிவியில ‘இங்க என்ன சொல்லுது’ ஷோவோட தொகுப்பாளரா மறுபடியும் சேனல்ல களமிறங்கியிருக்கேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE