ஜாக்பாட் - திரை விமர்சனம்

By காமதேனு

இரண்டு தில்லாலங்கடிகள். பணத்திற்காக திருட்டு, மோசடி, அடிதடி என்று சுற்றும் அவர்களுக்கு புதையல் போல ஒரு ரகசியம் கிடைக்கிறது. அவர்கள் தேடிச்சென்ற அந்த அட்சய பாத்திரம் அவர்களுக்குக் கிடைத்ததா என்பதை காமெடி கலாட்டாவுடன் சொல்லியிருக்கும் படம் ‘ஜாக்பாட்.’

கதைக்காக, சம்பவங்களுக்காக இயக்குநர் கல்யாண் அதிகம் கவலைப்படவில்லை. அவரது முந்தைய ‘குலேபகாவலி’ படத்தைக் கலைத்துப் போட்ட ஒரு கதைதான் இந்தப் படம். ஆனால், நகைச்சுவையில் இயக்குநர் எந்தக் குறையும் வைக்கவில்லை. 1918 காலகட்ட அட்சயப் பாத்திரத்துக்கான லிங்க்கையும் சமகாலத்துடன் இணைத்ததோடு ஜோதிகா-ரேவதியின் அடுத்தகட்டச் செயல்
பாடுகளையும் பதிவு செய்திருக்கும் விதம் சிறப்பு.

நாயகியாக ஜோதிகா. அதே குறும்பு, அதே சுறுசுறுப்பு என்று கலக்கியிருக்கிறார். நடனம், சண்டைக்காட்சியிலும் அசத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கான பில்டப் காட்சிகள் படம் முடியும் வரை தொடர்வதுதான் கொஞ்சம் அலுப்பு.

படம்  முழுக்க ஜோதிகாவுடன் சேர்ந்து குறும்பு, கலாட்டா செய்திருக்கிறார் ரேவதி. ஆனந்தராஜ் இரட்டைக் கதாபாத்திரங்களில் செம்மையாக நடித்துள்ளார். அவரின் நுணுக்கமான நகைச்சுவை உணர்வும் முகபாவங்களும் வியப்பூட்டுகிறது. யோகி பாபு சுய கலாய்ப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE