மெடிக்கல் ஷாப்பில் திருடிய மருந்துகளைக் கொண்டு போலி டாக்டராக கிளினிக் நடத்தும் சில்லறை திருடன் ஜீவா. ஐஐடியில் ஆட்குறைப்பில் வேலை இழந்த நண்பன் சதீஷ். எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் எனும் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா. இவர்களுடன் கடன் தொல்லையால் தற்கொலை செய்ய முடிவெடுத்த விவசாயியும் சேர்ந்துகொள்ள வங்கியில்
கொள்ளை அடிக்கும் திட்டம் உருவாகிறது. இவர்களுக்கு உதவியாக ஒரு சிம்பன்சி குரங்கும் வருகிறது. கொள்ளையில் வென்றார்களா தங்கள் பிரச்சினையிலிருந்து மீண்டார்களா என்பதுதான் படத்தின் கதை.
காமெடிக் களம் என்பதால் ஜீவா பொருந்திப் போயுள்ளார். குறும்பான காதலும் அதிரடி
யான சண்டைக் காட்சிகளும் சேர்ந்துகொள்ள மாஸ் காட்டியிருக்கிறார். நாயகி ஷாலினி பாண்டே அழகு. ஹீரோவைக் காதலிப்பது தவிர வேறு வேலை கிடையாது.