க.விக்னேஷ்வரன்
ரப்பர் உடலும் அசத்தும் நகைச்சுவையுமாகத் தமிழ் மக்களுக்குப் பழக்கமான பிரபுதேவா, காவல் துறை அதிகாரியாகக் கலங்கடித்திருக்கும் திரைப்படம், ‘பொன் மாணிக்கவேல்’ பற்றிய தகவல்களுக்காக, இயக்குநர் ஏ.சி.முகிலைச் சந்தித்தேன். பிரபுதேவாவின் 50-வது படமான இப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் முகில், பிரபுதேவாவின் பாலிவுட் பயணத்தில் பக்கபலமாக இருந்தவர். அறை முழுவதும் அலங்கரிக்கும் திரை ஆளுமைகளின் படங்களுக்கு மத்தியில் புன்னகையுடன் அமர்ந்திருந்தவரிடம் ஒரு பேட்டி:
உங்களைப் பத்திச் சொல்லுங்க…
பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம், சென்னை பச்சையப்பா காலேஜ்ல முதுகலைப் படிப்பு படிச்சு முடிச்சுட்டு, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேரணும்னு முயற்சி பண்ணினேன். குடும்பத்துல கொஞ்சம் பணக்கஷ்டம். அதனால அது கைகூடல. அப்புறமா பாண்டியராஜன் சார்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்து ‘கோபாலா கோபாலா’, ‘சுப்ரமணிய சுவாமி’, ‘கபடி கபடி’ படங்கள்ல வேலை பார்த்தேன்.