உ.சந்தானலெட்சுமி
‘பிரிவோம் சந்திப்போம்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த தினேஷ் – ரக்ஷிதா ஜோடி, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ‘நாச்சியார்புரம்’ தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கிறது. கதையில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் உருகி உருகிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடியைத் தமிழகமே ஆசிர்வதித்ததெல்லாம் வரலாறு. திருமணத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் தொடர் இதுதான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வந்திருந்த அந்தக் காதல் தம்பதியைச் சந்தித்தேன்.
“கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்பத்தான் கைகூடி வந்திருக்கு. இந்த சீரியலுக்கு மேடத்தோட கால்ஷீட்டுக்காகத்தான் ரொம்ப நாள் வெயிட் பண்ண வேண்டியதாயிடுச்சு” என்று கண் சிமிட்டுகிறார் தினேஷ்.