திரை விமர்சனம் :ஹவுஸ் ஓனர்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

    ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கிஷோரும், அவரது மனைவி ரஞ்சினியும் சென்னையில் வசிக்கின்றனர். ஞாபகமறதியால் அவதிப்படும் கிஷோருக்கு இடைக்காலத்தில் நடந்ததெல்லாம் மறந்துவிடுகிறது. தன் இளவயது திருமணம், அப்போதைய மனைவியின் முகம், சென்னையில் வாங்கிய வீடு ஆகியவற்றோடு தேங்கி நிற்கிறது அவரது நினைவுகள். இந்தத் தம்பதியின் வாழ்க்கைக்கும், சென்னை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்துக்கும் இடையேயான தொடர்பை பேசுவதே ‘ஹவுஸ் ஓனர்’.

    வாசுவுக்கு அல்சைமர் நோய் இருப்பதால் கதை நிகழ்காலமும் கடந்தகாலமுமாகச் சொல்லப்படுகிறது. நிகழ்காலத்தின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு திருமணமான புதிதில் நடந்த காதல் தருணங்களை நினைவுபடுத்துகின்றன. 40-50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலக்காட்டுப் பின்னணியில் மிகுந்த அழகியல் உணர்வுடன் படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் கண்களுக்கும் இதயத்துக்கும் இதமளிக்கின்றன. இந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளிலும் அதிக அளவில் மழையைப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்குச் சான்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE