திரை விமர்சனம்: சிந்துபாத்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

    சட்டவிரோத செயல்களைச் செய்யும் ஒரு ரவுடி  கும்பல் தாய்லாந்தில் நாயகி அஞ்சலியை சிறைப்பிடித்து வைத்துள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து அஞ்சலி உள்ளிட்ட மேலும் சில இளம்பெண்களை மீட்கும் நாயகனின் கதையே சிந்துபாத்.

    விஜய் சேதுபதி திரு என்கிற கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். காது கேட்காது, ஆனால், தேவையானது மட்டும் கேட்கும் என்கிற அவரின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரசியம் சேர்க்கிறது. தம்பி சூர்யாவைத் தேடிப் பதறுவது, திருடும் முறைகளில் நூதன உத்தியைக் கையாள்வது, ரொமான்டிக் லுக் என்கிற பெயரில் காமெடி செய்வது, காதலில் கிறங்குவது, என் பொண்டாட்டி எங்கேடா என்று ஆவேசத்தில் சண்டையிடுவது என மாஸ் நாயகனுக்கான அம்சங்களில் வழக்கம் போல் திறமையை வெளிப்படுத்துகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE