‘ ‘ஆச்சி  மனோரமா மாதிரி வரணும் டூட்!’’ - காமெடியில் கலக்கும் அகல்யா

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

ஆதித்யா சேனலில், ‘மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...’ நிகழ்ச்சியில் ‘டாடி எனக்கொரு டவுட்’ புகழ் செந்திலை அடித்துத் துவைக்கும் ‘அடக்கமான மனைவி(!)’யாக நடித்து அசத்திய அகல்யா, இப்போது ஒன் உமன் ஆர்மியாக ‘நீங்க சொல்லுங்க டூட்’ ஷோவினைத் தொகுத்து வழங்குகிறார். அம்மணியுடன் ஒரு சின்ன காமெடி கலந்துரையாடல்.

 வீடியோ ஜாக்கி கனவு உங்களுக்குள்ள துளிர்விட்டது எப்போ?

நான் விஜேவானதே ஒரு விபத்துதான். ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சிக்காக எங்க காலேஜுக்கு ஒரு சேனல்ல இருந்து வந்திருந்தாங்க. அப்போ நான் ஆட்டம், பாட்டு, காமெடின்னு அடிச்ச லூட்டிய பார்த்துட்டு, “நீயெல்லாம் டிவில வர வேண்டிய ஆளு”ன்னு கூப்பிட்டாங்க.
சரி… போய்த்தான் பார்ப்போமேன்னு வடிவேலு கணக்கா சிந்திச்சு, ஜாலியா ஆரம்பிச்சேன். உண்மையிலேயே நல்ல ரெஸ்பான்ஸ் டூட்!

 ‘மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...’ வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?

‘இமயம்’, ‘புதுயுகம்’ மாதிரியான சேனல்கள்ல முகம் காட்டியிருந்தேன். அந்த நேரத்துலதான் ‘ஆதித்யா’ சேனல் வாய்ப்பு வந்தது. ‘அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்’ மொமென்ட் அது. ஆரம்பத்துல, லைவ் ஷோ தந்தாங்க. அதுக்கு அப்புறம்தான், ‘மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...’ வாய்ப்பு வந்துச்சு. ஆதித்யா அகல்யாங்கிற அடையாளத்தை அந்த ஷோ தான் தந்துச்சு.

 சேனல்ல காமெடி நிகழ்ச்சி பண்றது அத்தனை சுலபமா இருக்கா?

மற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறப்போ, நம்ம முன்னாடியே ஸ்க்ரிப்ட் இருக்கும். ஆனா, நகைச்சுவை நிகழ்ச்சி ரொம்ப சவாலானது. சூழலுக்கு ஏத்த மாதிரி சுவையா பேசுறதுதான் நகைச்சுவை. கடவுள் ஏதோ நமக்குக் கொடுத்திருக்கான்னு நானும் காமெடி பண்றேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE