ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘ஜேசன் பார்ன் யுனிவெர்ஸின் ட்ரெட்ஸ்டோன்’ சீரிஸில்தான் ஸ்ருதி நடிக்கிறார். விரைவில் ஹங்கேரியில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்ளவுள்ளாராம்.
அப்பா உள்ளூர் டிவி, மகள் உலக டிவி!
`முகமூடி' படத்தில் தமிழில் அறிமுகமாகி பின்பு சரியாக வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு தேசம் போனார் பூஜா ஹெக்டே. தற்போது சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வீடு தேடிவந்திருப்பதால் அம்மணிக்கு அத்தனை குஷி. தமிழ் உச்சரிப்பு சரியாக வரவேண்டுமென்று சிறப்பு பயிற்சியும் எடுக்கப் போகிறாராம்.
மும்பை காற்றே முத்தமிழ் வீசு!