மகா பெரியவா: அருளே ஆனந்தம் 16

By காமதேனு

பி. சுவாமிநாதன்

 வ யதாகிவிட்டால் தங்களால் இனி எதையும் செய்ய முடியாது என்று பெரும்பாலோர் தீர்மானித்து, ஒதுங்கி விடுகிறார்கள். இன்னும் சிலரோ,‘மேலும் பணத்தைப் பெருக்குவோம்’ என்று ஓய்வுக்குப் பின்னும் ஒரு கவுரவமான உத்தியோகத்தைத் தேடுகிறார்கள்.

‘உத்தியோகத்தில் இருந்தது போதும்... ரிடையர்டு ஆகிவிட்டோம். இனி உட்கார்ந்து ஓய்வுதான்’ என்கிற நிலையில் இருக்கின்றவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு ஈஸிசேரோ, கட்டிலோ, அருகில் இருக்கிற பார்க் பெஞ்ச்சோ, வாசல் திண்ணையோ.. இப்படி ஏதேனும் ஒன்றுதான் பெரும்பான்மையான நேரங்களில் இவர்களின் இருப்பிடம் ஆகிவிடுகிறது. அதைத் தாண்டி அவர்களின் யோசனை செயல்பட மறுக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE