ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயும் சினிமாவில் களமிறங்குகிறார். விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பவானிஸ்ரீ நடிக்கவுள்ளாராம்.
அண்ணன் போல் வளர்க...
கிரிக்கெட் வீரர்கபில்தேவாக, ரன்வீர் சிங்நடிக்கும் ‘83' இந்திப் படத்தில் கபில்தேவின் மனைவி ரோமி பாட்டியா கதாபாத்திரத்தில் ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன் நடிக்கிறார். தன் மனைவியைவிட தனக்கு யார் சிறந்த ஜோடியாக நடிக்க முடியும் என்று ட்விட்டரில் தீபிகா புகழ் பாடி வருகிறார் ரன்வீர்.
ஸ்யப்பா... முடியல...