காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
>> பெரிய படிப்பு படித்துவிட்டு இயற்கை விவசாயம், பொதுத்தொண்டு என்று களப்பணியாற்றும் சூர்யா, சாதாரண கவுன்சிலருக்கும், கரைவேட்டிக்கும் இருக்கும் மரியாதையைப் பார்த்து வியந்து, அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். குடும்பத்தினரின் எச்சரிக்கை யையும் மீறி அரசியலிில் அத்தனை பேரையும் பகைத்துக்கொள்கிறார். அதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குடும்பத்தில்் நடக்கும் குளறுபடிகளைத் தாண்டி அவர் வெற்றி பெறுகிறாரா என்பதே மீதிக்கதை.
>> அரசியல் கனவு காணும் இளைஞனாகவும், அந்தக் கனவு உடையும்போது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும்போதும் அதிர்ச்சி விலகாமல் தனக்கு நேர்ந்ததை எண்ணி உறைந்துபோகும்போதும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் சூர்யா.