வாய்ப்புகள் இல்லைன்னா வாழ்க்கையா இல்லை?- நம்பிக்கை பேசும் நகுலின் மனைவி

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி

சென்னையின் வாகன நெரிசலில் ஊர்ந்து சென்று பாண்டிபஜாரைத் தாண்டினால், ஜெகதாம்பாள் தெருவில் வரவேற்கிறது பிரின்ஸ் அபார்ட்மென்ட். கட்டிடத்தின் பெயருக்கேற்ப இளவரசனாகவே மாறி, தன் காதல் மனைவியைக் கொஞ்சிக்கொண்டிருந்தார் நகுல். வாசலில், மாலைப் பொழுதின் மஞ்சள் வெளிச்சத்தில் காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த மஞ்சள் அரளிப் பூக்கள் சூழலுக்கு மேலும் ரம்மியம் கூட்டிக்கொண்டிருந்தன.

நம்மைப் பார்த்த வெட்கத்தில் நகுலின் பிடியிலிருந்து விலகிய ஸ்ருதி, தன் செல்ல நாய்க்குட்டியைக் கொஞ்ச ஆரம்பித்தார். “ஸ்ருதிக்கு நாய்க்குட்டினா ரொம்ப இஷ்டம்” என்ற வழிந்து தள்ளிய நகுலை இடைமறித்து, “ஆமா எனக்கு நாய்க்குட்டினா உயிர்; உனக்குப் பூனைன்னா உயிர்” என்கிற ஸ்ருதியின் ஹை டெசிபல் சுருதிக்கு கலகல பார்டியான நகுல் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது அத்தனை அழகு.

“ஆமாங்க... வாழ்க்கை அத்தனை சந்தோஷமா போய்க்கிட்டிருக்கு... நிஜத்துல நாங்க ரெண்டு பேருமே டாம் அண்ட் ஜெர்ரி மாதிரிதான்... எப்பவுமே ஒருத்தரையொருத்தர் சீண்டிக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டு, கொஞ்சிக்கிட்டு இருப்போம். ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் கிடையாது” என்று இருவரும் கோரஸாய் சுயவிளக்கம் தருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE