சா.மகிழ்மதி
ஆழ்வார்பேட்டையில் அந்த அபார்ட்மென்ட் முழுக்கவே சந்தோஷக் கூச்சல் சலசலத்துக் கொண்டிருந்தது. “ஆமாங்க... எங்க வீட்ல மூன்றாவதா ஒருத்தரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...” என்று வெட்கப் புன்னகையுடன் வாசலில் நின்று வரவேற்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
கணேஷ் வெங்கட்ராம் - நிஷா காதல் ஜோடியின் திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து ஆசிர்வதித்திருக்கிறார் கடவுள். நிஷாவின் ஏழாவது மாத ‘சீமந்த’ விழாவைத்தான் அத்தனை ரகளையான, ரசனையான விழாவாகக் கொண்டாடினார் கணேஷ் வெங்கட்ராம்.
“நீ உட்காரும்மா... ரெஸ்ட் எடு” என்று மனைவி நிஷாவைக் கையமர்த்தி, விருந்தினர்கள், நண்பர்கள் உபசரிப்பு என்று பரபரக்க ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் வெங்கட்ராமின் சந்தோஷம் கலைக்காமல், சீமந்த வைபவம் முடிந்தவுடன் காதல் ஜோடியிடம் பேசினேன்.