உ.சந்தானலெட்சுமி
கேரளாவில் நடந்த, ‘மிஸ் குளோப் இந்தியா 2019’ அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் பூரிப்புடன் புன்னகைக்கிறார் தமிழகத் தாரகை அக் ஷரா ரெட்டி. இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து அணிவகுத்த அழகிகளுக்கு மத்தியில், பல சுற்றுகளைக் கடந்து வெற்றி மாலை சூடியிருக்கிறார் இந்தச் சென்னைப் பொண்ணு. வாகை சூடி வந்தவரை வாழ்த்துகளுடன் சந்திக்க, கிண்டி ஹயாத் பார்க்கின் வரவேற்பறையில் காத்திருந்தேன். சிவப்பு நிற மாடர்ன் உடையில் வந்து கை குலுக்கியவர், புன்னகை மாறாமல் அழகுத் தமிழில் பேசத் தொடங்கினார்.
பாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க. பேர்ல தெலுங்கு வாசனை அடிக்குது. ஆனா, தமிழ் அழகா பேசுறீங்களே?
(சிரித்தவாறே) ஹய்யோ... சுத்தமான தமிழ்ப் பொண்ணு நான். எங்க ஃபேமிலி நாலு தலைமுறையா சென்னையிலதான் இருக்காங்க. நான் பொறந்து வளர்ந்து ஸ்கூல் படிச்சது எல்லாமே இங்கதான். காலேஜ் மட்டும் ஷார்ஜாவில் படிச்சேன். அதுக்குப் பிறகு, இங்கதான் இருக்கேன்.