K-13: திரை விமர்சனம்

By காமதேனு

ஒரு வீட்டில் ஒரு நாளில் நடக்கும் மர்ம சம்பவங்களின் முன், பின் நீட்சியே ‘K-13’படத்தின் கதை.

K-13 வீட்டில் நாற்காலியில் கட்டப்பட்டு கிடக்கிறார் அருள்நிதி. அவர் கண் விழித்துப் பார்த்தால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அங்கு நடந்தது என்ன, ஷ்ரத்தாவின் மரணத்தில் உள்ள மர்மம் என்ன, அருள்நிதி இதிலிருந்து தப்பித்தாரா, அவரின் 10 வருடக் கனவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அலட்டிக்கொள்ளாமல் ஒரு சைக்காலஜி த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களைக் காட்சிப்படுத்திய விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். மற்றபடி தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதையைக் கட்டமைத்துள்ளார்.

`டிமான்ட்டி காலனி', ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' போன்ற படங்களின் பாணியில் அருள்நிதிக்கு இது இன்னொரு முக்கியமான படம். கதைக்காகத்  தவிப்பது, மன அழுத்தத்தில் உழல்வது, மது போதையில் உளறுவது, கொலை நடந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்வது, கொலைப்பழியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடுவது எனக் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE