சா.மகிழ்மதி
“வில்லி ரோல் பண்றோமே... மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோங்கிற பயம் ஆரம்பத்துல இருந்துச்சு. ஆனா, இப்ப அந்த பயமெல்லாம் போயே போச்சு. ஏன்னா, என்னோட கேரக்டரை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க” அழகு தமிழில் ஆனந்தமாய் பேசுகிறார் அங்கனா.
பெங்களூரு மாடலான அங்கனா ரகளைபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். தென்னக மொழி படங்களில் செகண்ட் ஹீரோயினாக கலக்கிய இவர், ‘தறி’ சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் வந்திருக்கிறார். ஈசிஆர் பங்களா ஒன்றில் தனது பார்வையாலே பணியாளர்களை மிரட்டிக் கொண்டிருந்த அங்கனாவைச் சந்தித்துப் பேசினேன்.``இதுதான் எனக்கு முதல் சீரியல். என்னோட முழு கவனமும் சினிமால தான். என்னுடைய திறமைய வெளிப்படுத்துறதுக்காக சின்னதா ஒரு வாய்ப்புக் கிடைச்சாக்கூட அதைச் சரியா செஞ்சுட்டு இருந்தேன்.
அப்படி இருந்த நான் எப்படி சீரியலுக்குள்ள வந்தேன்னு எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு. சீரியலுக்குள்ள வர்றதுக்கு முந்தி கிட்டத்தட்ட நூறு தடவையாவது யோசிச்சிருப்பேன். கதையைக் கேட்டபின்னாடி என்னோட முடிவை மாத்திக்கிட்டேன். அந்தளவுக்கு ‘தறி’ சீரியலின் கதை என் மனசுக்கு பிடிச்சிருச்சு. ஒன் விமன் ஆர்மி ரோல்னு சொல்வாங்களே... அப்படியான கேரக்டர் எனக்கு” என்றவரை இடைமறித்து, “மாஸ் வில்லி ரோல் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறீங்களே..?” என்றேன்.