என்.சுவாமிநாதன்
குமரி முனையிலும் கும்பகோணத்திலுமாய், ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?’ படம் வேகமாக வளர்கிறது. ‘கல்லூரி' அகில் ஹீரோவாகவும், மொட்டை ராஜேந்திரன் செகண்ட் ஹீரோ ரேஞ்சிலும் நடிக்கிறார்கள். திற்பரப்பு ஏரிக்கு அருகே ஒரு லொக்கேஷனில் பனை ஏறும் தொழிலாளி ராஜேந்திரன் பதநீர் எடுக்கச் செல்லும் காட்சி ஷூட் செய்யப்பட்டுக்கொண்டிருக்க... தேநீர் இடைவெளியில் படத்தின் இயக்குநர் கெவினை ஓரம் கட்டிப் பேசினேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்..?
எனக்கு குமரி மாவட்டம் செந்தறை தான் பூர்வீகம். களரி பண்பாட்டு மையத்தில் கிராமிய கலை கத்துகிட்ட நான், நடிக்கிற ஆசையில தான் சென்னைக்குப் போனேன். காஞ்சனா 2, சிங்கம் 2 படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல தலை காட்டுனேன். கொஞ்ச நாளு டைரக்டர் ஹரி சாருக்கு டிரைவரா இருந்தேன். எங்கயாச்சும் லாங் டிரிப் போகணும்னா என்னதான் கூப்பிடுவாரு.