மெஹந்தி சர்க்கஸ்: திரை விமர்சனம்!

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

> 1992-ல் சர்க்கஸ் குழுவுடன் கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறைக்கு வரும் மெஹந்தியும் அங்கு கேஸட் கடை வைத்திருக்கும் ஜீவாவும் காதலிக்கிறார்கள். சாதிய பற்றாளாரான தந்தையின் தலையீட்டால் ஜீவா காதலியைப் பிரிய நேர்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின் மெஹந்தியின் மகள் நிஷா ஜீவாவையும் மெஹந்தியையும் மீண்டும் சந்திக்க வைக்க முயல்கிறாள். இருவரும் சந்தித்தார்களா? பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

> சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் கதை-வசனம் எழுதியிருக்கிறார். சினிமா நட்சத்திரங்களின் அரசியல் கனவுகளைக் கிண்டலடிப்பது உள்ளிட்ட வசனங்களில் ராஜுமுருகனின் சமூகப் பகடி பளிச்சிடுகிறது. “மனசுல இருக்கறவன்தான் புருஷன். உடம்புக்காக மட்டும் வந்துட்டு போறவன் இல்ல” என்பதுபோன்ற வசனங்களும் மனதைத் தொடுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE