திருநங்கை நண்பர்களுக்கு மானசீக நன்றி!- ‘தாதா 87' ஸ்ரீபல்லவி

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

சூரியனும் சேர்ந்து அனல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த உச்சி வெயிலில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். வளசரவாக்கம், காமகோடி நகரில் ஜில் காற்றை வீசியபடியே கிளை பரப்பியிருந்தன மரங்கள். தெருவடைத்த கொன்றை மர நிழலில் உதிர்ந்திருந்த பூக்கள் அத்தனை ரம்மியம். பூக்களில் கால் பதிக்காமல் தாண்டிச் சென்றால், குழலூதும் கிருஷ்ணர் வரவேற்கிறார். ‘தாதா 87’ படத்தின் ஹீரோயின் ஸ்ரீபல்லவியின் வீடு.

திரைப்படங்களில் ஆண், பெண்ணாகவும், பெண், ஆணாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. ஸ்ரீபல்லவியின் இந்தத் துணிச்சலான முடிவுக்கு சாட்சியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன.

சின்னஞ்சிறிய கண்கள், பச்சரிசி பல்வரிசை, கூர்ந்த நாசி, அணிந்திருக்கிற நீல நிற புடவைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் துருத்திக் கொண்டிருக்கிற கைக்கடிகாரம், கள்ளமில்லாத சிரிப்பு என்று முதல் பார்வையிலேயே ஈர்த்துவிடுகிறார் ஸ்ரீபல்லவி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE