நா.இரமேஷ்குமார்
‘பூலோகத்தில்தான் தகுதியில்லாதவர்களுக்குப் பதவி கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது எமலோகத்திலுமா..?', 'அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா...', 'அக்கவுன்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஆடைகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறாரா..?' என்று 'தர்மபிரபு' டீஸரின் வசனங்கள் இணையதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்த சமயத்தில், ஏவிஎம் கார்டனில் படத்தின் இயக்குநர் முத்து குமரனைச் சந்தித்தேன்.
"ஒழுங்கா பேசிக்கிட்டு இருடா மச்சி... வந்துடறேன்" என்று யோகி பாபுவிடம் சொல்லிவிட்டு டப்பிங்கில் இருந்து எழுந்து வெளியே வருகிறார்.
முதல் படமான ‘கன்னிராசி’யே இன்னும் ரிலீசாகலை... அதுக்குள்ள ‘தர்மபிரபு’ ரிலீஸுக்கு ரெடியாயிடுச்சே?