சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ

‘கீ’, ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ என நடிகர் ஜீவாவுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. “எல்லாப் புகழும் நிக்கி கல்ராணிக்குத்தான். தொடர்ந்து என்னை அதிகமான படங்களில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்” என்று புகழ்ந்து தள்ளுகிறார் ஜீவா.

பாராட்டோட நிறுத்திடாம வாய்ப்பும் கொடுங்க பாஸ்!

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று திராவிட செல்வியாய் வலம் வரும் வேதிகா இப்பவும் மராட்டியத்தில்தான் வாழ்கிறார். ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரங்களில், மும்பையில் தன் வீட்டருகே இருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கணிதம் டியூசன் எடுக்கிறார் வேதிகா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE