ஃபியூச்சர்ல ஜானகி அம்மா மாதிரி வரணும்!- super singer கலகல பேட்டி

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் செல்லக் குரல்களை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டோம். தங்களது குரலால் நம்மை வசீகரிப்பதுடன் சுட்டித்தனங்களால் நம்மைக் கட்டிப்போட்டு விடும் அந்த சுட்டீஸை ஒரு எட்டு பார்க்கலாம் என்று விஜய் டிவி அலுவலகக் கதவைக் காலையிலேயே தட்டினேன். ஜூனியர் சிங்கர்ஸ் ஒவ்வொருவராய் எனக்கு தரிசனம் தந்தார்கள்.

தற்போதைய சீசனில் டாப் 5 லிஸ்டில் இருக்கும் சிங்கப்பூர் சூர்யா, கனடா சின்மயி, அனுஷ்யா, ஹிரித்திக் ஆகிய நால்வரும் என்னை அதிக நேரம் காக்க வைக்காமல் வந்துவிட்டார்கள். ‘கானாகிங்’ பூவையார் மட்டும் “சாரிக்கா... ட்ரெயினிங் இப்பதான் முடிஞ்சது” என்று கொஞ்சம் லேட் என்ட்ரி கொடுத்தான். “ஓகே, உங்களை இன்டர்வியூ பண்ணலாமா செல்லம்ஸ்..?” என்று கேட்டதுதான் தாமதம், “என்னாது... இன்டர்வியூ பண்ணப்போறீங்களா... அப்டினா கேள்விலாம் கேப்பீங்களா, ப்ளீஸ்... மேத்ஸ், கெமிஸ்ட்ரில மட்டும் கேட்காதீங்க” என்று அனுஷ்யாவும் சூர்யாவும் அரண்டார்கள். “எதுல வேணா கேளுங்க. இந்த... இங்கிலீஷ்ல மட்டும் கேட்காதீங்க” என்று பூவையார் கண்டிஷன் போட, சூட்டீஸ்களின் குதூகல இன்டர்வியூ ஆரம்பமானது...

“எனக்கு பாடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால தான் இந்த ஷோல கலந்துக்கிறதுக்காகவே சிங்கப்பூர்ல இருந்து இங்க வந்திருக்கேன். இங்க எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லக்கா... புதுசா நிறைய ஃப்ரெண்ட்ஸும் கிடைச்சிருக்காங்களே” என்றான் சூர்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE