ஆண்களால் ஆசிர்வதிக்கப்பட்டது எனது உலகம்- ‘தடயம்’ தமயந்தி நேர்முகம்

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

சமீப காலமாய் தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. இயக்கம் முதல் ஒளிப்பதிவு வரை சகல துறைகளிலும் பெண்கள் களமிறங்கி கலக்குகிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவராக, தெற்கத்தி மண்ணின் ஈர வாசனையோடு எழுத்தாளராக, பாடலாசிரியராக, ஊடகவியலாளராக, வசனகர்த்தாவாக அறியப்பட்ட தமயந்தி ‘தடயம்’ படம் இயக்குநராகவும் தடம் பதிக்கிறார்.

ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து உரையாடினேன். “வாங்க தம்பி...” என்று அன்பொழுகும் வார்த்தைகளில் பேச்சு ஆரம்பமாகிறது.

“சிறுவயது முதலே தனிமையிலும் மன நெருக்கடியிலும் வாழ்ந்தவள் நான். அப்போதெல்லாம் இசையும் எழுத்தும் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தது. என் தனிமையை பாடல்கள் இனிமையாக மாற்றின. இப்போதுவரை அந்த உலகம் அப்படித்தான் இருக்கிறது. என்னையும் அறியாமல், என் பேச்சில் பாடல்களும் இசையுமே நிறைந்திருக்கின்றன" என்று தனது கவிதைகளைப் போலவே பேசுகிறார் தமயந்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE