சினி பிட்ஸ்

By காமதேனு

விஷாலின் கல்யாண அறிவிப்பு பலருக்கு ‘ரூட் க்ளியர்’ செய்திருக்கிறது. ‘படிப்பு முடிந்ததும் நடிப்பு’ என்று பாவ்லா காட்டிக் கொண்டிருந்த லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் தீவிரமாக மாப்பிள்ளை தேடிவருகிறார். அடுத்து, வரலட்சுமிக்கும் கல்யாண ஆசை வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்னாது... நடிகர் சங்க கட்டிடம் கட்டியாச்சா?!

‘தேவ்’ பட தோல்வியால் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்குகிறார் கார்த்தி. அண்ணி ஜோதிகாவுடன் சேர்ந்து ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னத்தின், ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார்.

படம் பார்க்காதவங்களையும், ‘காற்று வெளியிடை’ பற்றி காஷ்மீர் விவகாரம் பேச வெச்சிடுச்சாமே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE