உணர்ச்சிக் காவியங்களின் தொழிற்சாலை!

By காமதேனு

திரைபாரதி
readers@kamadenu.in

திரையிசைத் திலகம், நடிகர் திலகம், நடிகையர் திலகம் வரிசையில் ‘இயக்குநர் திலகம்’ என்று புகழ்மாலை சூட்டப்பட்டவர் கே.எஸ்.ஜி என்று அழைக்கப்பட்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

அது 1962-ம் வருடம். கே.எஸ்.ஜி எழுதி, இயக்குநராக அறிமுகமான ‘சாரதா’ படம் வெளியாகி, திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்த ரசிகர்கள் இப்படியும் கூட கதை எழுத முடியுமா, இப்படியெல்லாம் வசனம் எழுத முடியுமா என்று வியப்பு மேலிட பேசிக்கொண்டார்கள். உண்மைதான்! படத்தில் 99 சதவீத காட்சிகளை நீண்ட வசனங்கள் தாங்கி நின்றன. கதையும் புரட்சிகரமானதாகவே இருந்தது.

விபத்தொன்றில் ஆண்மையை இழந்து விடுகிறான் நாயகன். இதனால் அவனது மனைவி துறவியைப்போல் வாழவேண்டிய பரிதாப நிலை. தன் பொருட்டு மனைவி எதற்காகத் தனது உணர்வுகளுக்குச் சமாதி கட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்து அவளுக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். அவளோ கல்லானாலும் கணவன் என்ற பண்பாட்டைப் பாதுகாக்க விரும்பும் தமிழ்ப் பெண். கணவன் ஆயிரம் முற்போக்குக் காரணங்களை அடுக்குகிறான். 

தாயே முன்வந்து மகனின் முடிவை ஆதரித்தபோதும் அசைந்து கொடுக்காமல் கதறித் துடிக்கிறாள். “பல் வலிக்கு மருந்து கேட்டால், பைத்தியத்துக்கு மருந்து கொடுக்கிறீர்களே?” என்று கூறி மறுக்கிறாள். கணவனோ தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உணர்ச்சிகர மிரட்டல் விடுக்கிறான். அவன் வாழ வேண்டும் என்று நினைக்கும் சாரதா, அவனது முடிவுக்குச் சம்மதித்து மணவறையில் மாலையோடு அமர்கிறாள். அப்போது தாம்பூலத் தட்டில் இருக்கும் தாலி அவளது கண்ணுக்கு நாகமாகத் தோன்றுகிறது. ஆனால், புதியவனின் தாலியைக் கழுத்தில் ஏற்கும்முன் கணவன் காலில் விழுந்து ஆசி பெறுகிறாள். அப்போது அவளது உயிர் பிரிந்துவிடுகிறது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு நல்லவள் உயிரை விட்டு விட்டாளே என்ற துக்கம் அழுத்த மாலை மாலையாக அழுதபடி திரையரங்கை விட்டு ரசிகர்கள் வெளியேறினார்கள். கத்திமேல் நடக்கும் இந்தக் கதையை தனது, உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க நீண்ட வசனங்களால் வெற்றிக்காவியமாக்கினார் கே.எஸ்.ஜி. ‘சாரதா’ படம் ஏற்படுத்திய பரபரப்பும் தாக்கமும் சமூக வசனப் படங்களுக்கான இடத்தையும் இருப்பையும் உருவாக்கியது. முதல் படத்திலேயே சிறந்த படத்துக்கான தேசியவிருதுச் சான்றிதழையும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குப் பெற்றுக்கொடுத்தது.

கொந்தளிக்கும் உணர்ச்சிகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE