இது  மனிதம் பேசும் நாடோடியின் கதை - ‘ஜிப்ஸி’ இயக்குநர் ராஜுமுருகன்

By காமதேனு

நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in



“வாழ்க்கைப் பயணத்தில் நான் சந்தித்த அனுபவங்களையும், பார்த்த மனிதர்களையும் ‘ஜிப்ஸி’யில் பதிவு பண்ணியிருக்கேன். கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி ஓர் அகோரித் தோழனைச் சந்திச்சேன். பார்க்குறதுக்கு அசப்புல அப்படியே பிளாக் அண்ட் ஒயிட் பாரதி மாதிரி இருந்தான். கூடவே, ‘கிம் கி டுக்’ கின் ஹீரோயின் மாதிரி ஒரு ஜப்பான் நாட்டு கண்ணம்மா. நோக்கங்களே இல்லாமல், ஏதோவொரு நேர்கோட்டில் அன்றைய இரவுப் பொழுது எங்களை இணைச்சிருந்துச்சு. முன்பு எப்போதோ என் மொபைலில் பதிவு செய்து வைத்திருந்த ஒரு பாடலை ஒலிக்க விட்டேன். கிட்டத்தட்ட ஆயிரம் புறாக்கள் ஒரே நேரத்தில் படபடக்கிற மாதிரியான குரலில் வழிகிற பாடல் அது. பாடல் ஒலித்ததும், ஜப்பான் கண்ணம்மா கண் விரித்து, ‘இது ஒரு ஜிப்ஸியின் குரலா..?’ எனக் கேட்டாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE