பார்ட்டி வித் டிடி!

By காமதேனு

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி 20 வருடங்களைத் தாண்டியிருக்கிறார் திவ்யதர்ஷினி. கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ராஜீவ்மேனனின் ‘சர்வம் தாளமயம்’ என்று கைவசம் முக்கியமான படங்களும் இருக்கின்றன. இந்த மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து ஈ. சி. ஆரில் நட்புகளுக்கு பார்ட்டி கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் டிடி.
பார்ட்டி வித் டிடி!

`1983' இந்திப் படத்தில் நடிக்கிறார் ஜீவா. இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகிறது இந்தப் படம். கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் இப்படத்தை கபீர்கான் இயக்குகிறார். மார்ச்சில் தொடங்கும் படப்பிடிப்புக்காக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன் தினமும் இரண்டு மணி நேர கிரிக்கெட் பயிற்சியில் இருக்கிறார் ஜீவா.
ஸ்ரீகாந்த் மாதிரியே ஆல் ரவுண்டராக கலக்குங்க ஜீவா!

தீபாவளியைத் தெறிக்கவிடுவதற்காக, விஜய் - அட்லி கூட்டணியில் அடுத்த படத்துக்கான சூட்டிங் 21-ம் தேதி தொடங்குகிறது. விஜய் படங்கள் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கீ போர்ட்’ றெக்கை கட்டிப் பறக்கும்போல. அதற்குள்ளாக ஒரு பாடலுக்கான ட்யூனைக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான். பெண்கள் கால் பந்தாட்ட அணியைப் பற்றிய கதையில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான செட் அமைத்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.
அந்த 11 நாயகிகள் யாருங்கோ?

மீண்டும் ஒரு அரசியல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். அவரது இயக்கத்தில் வெளியாகும் ‘காப்பான்’ மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இந்தப் படத்தில் பிரதமராக மோகன்லாலும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிக்கிறார்கள். மோகன்லால் மகனாக ஆர்யா நடிக்கிறார்.
ஒரு வலுவான பத்திரிகையாளர் கதாபாத்திரம் இருக்குமே?!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE