இயக்குநர் ஆசை ஒரு ஓரமா உட்கார்ந்திருக்கு!- ‘சுட்டி’ அரவிந்த் கலகல...

By காமதேனு

சன் லைஃப் சேனலில் ‘மசாலா கஃபே’ நிகழ்ச்சி வழியே கண்களில் கலகலப்பான காமெடியை வாரித் தூவி வருகிறார் ‘சுட்டி’ அரவிந்த்.  

சின்னத்திரையோடு சினிமா, ப்ளாக் ஷிப் யூ-டியூப் சேனல் நிகழ்ச்சி என படு பிஸியாக சுழன்று வந்துகொண்டிருக்கும் அரவிந்தை காமதேனு இதழுக்காக மடக்கினேன்.

சின்னத்திரை காமெடியில் கலக்கினாலும் யூ-டியூப் சேனல் உயரம் உங்கள் அணியை இன்னும் கவனிக்க வைக்கிறதே?

நான், விக்கி, இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸுன்னு 4 பேர் விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சதுதான் ‘ப்ளாக் ஷிப்’ யூ-டியூப் சேனல். இன்னைக்கு ஐந்தாறு எடிட்டர்ஸ், ஏழெட்டு கேமராமேன், கிரியேட்டிவ் டீம்ல பதினைந்து பேர் இப்படி 43 பேர் இருக்கோம்.  18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தாச்சு. புதுப்புது திறமைசாலிங்க வந்துக்கிட்டே இருக்காங்க. எங்க டீம்லயே ஒவ்வொருத்தரும்  திரைப்பட இயக்குநரா வர ஆரம்பிச்சாச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.   டிவி-யில  ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி பார்க்குறதுக்காகவே பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போன காலம் எல்லாம் இருக்கு. இன்னைக்கு ஒரு நிகழ்ச்சியை மிஸ் பண்ணா பிரச்சினையே இல்லை. யூ-டியூப்ல எப்போ வேணும்னாலும் பார்த்துக்கலாம்.  சயின்ஸ் வளர்ச்சி. அந்த வளர்ச்சி கூடவே நாமளும் ஓடத் தயரா இருக்கணும். அதுலதான் நம்மோட வளர்ச்சியும் இருக்கு.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE