பொம்பள ரூபத்து எமன் மதுபாலா!- ‘அக்னிதேவ்’ஜான் பால் ராஜன்

By காமதேனு

சாலிகிராமம் ஸ்டுடியோ 36 ஹோட்டல். ரிசப்ஷனில் இருந்த டிவியில் அரசியல் விவாதம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. விவாதக் கூத்துகளை ஓரக்கண்ணால் ரசித்தபடியே பேட்டிக்கு வந்தமர்கிறார் ‘அக்னிதேவ்’ படத்தின் இயக்குநர் ஜான் பால் ராஜன். ‘அக்னிதேவ்’ ட்ரெய்லரில் வந்த வசனங்கள் அரசியல்வாதிகளை நேரடியாகவே அட்டாக் பண்ணும் விதத்தில் இருந்ததால் பேட்டியை மதுபாலாவில் இருந்தே ஆரம்பித்தேன்.

‘அக்னிதேவ்’ வசனங்கள், படத்தின் பப்ளிசிட்டிக்காக சேர்த்த வசனங்களா... இல்லை நிஜமாவே துணிச்சலான அரசியல் படமா?

மதுபாலா, ‘என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடங்க'ன்னு பேசுற வசனத்தைப் பற்றித்தானே கேட்கறீங்க? (சிரிக்கிறார்). படத்தோட பப்ளிசிட்டிக்காக எல்லாம் அந்த வசனத்தை வைக்கலைங்க. நிஜமாவே இது பக்கா அரசியல் படம்தான். ராஜேஷ்குமார் சாரோட ஒரு நாவலை மையமா வெச்சு ரெடி பண்ணிய கதை. முப்பது சதவிகிதம் அவரோட ஒரு நாவலை மையமாகவும், மீதிக் கதையை இப்ப இருக்கிற காலகட்டத்துக்கு ஏற்றமாதிரியும் உருவாக்கியிருக்கோம். ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி, ஜெயலலிதா மேடமையோ, அவங்க கூட இருந்தவங்களையோ மனசுல வெச்சு எல்லாம் எந்த கேரக்டரையும் உருவாக்கலை. இன்னும் சொல்லப் போனா... எனக்கு ஜெயலலிதா மேடம் இன்ஸ்பிரேஷன்னு கூட சொல்லலாம்.

அப்போ ‘அக்னிதேவ்’ என்ன மாதிரியான படம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE