’பேட்ட’ வசனத்துக்குப் பதிலடி ’விஸ்வாசம்’ ?- உண்மையைச் சொல்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி

By காமதேனு

“மீசையை முறுக்கிட்டு, அலப்பறையான ஆளாவும் சரி, ஸ்கிரீன்ல நயன்தாராவுடன் ரொமான்ஸ்ல மேஜிக் காட்டுகிறவராகவும் சரி, அஜித் சார் பின்னிட்டார்... ஒரு ஜாலியான, எமோஷனலான திருவிழாப் படமா இருக்கு. முழுப் படத்தையும் பார்த்துட்டேன்... சூப்பரா வந்திருக்கு” என்று செம உற்சாகமாய் பேச ஆரம்பிக்கிறார் விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி.

 ‘விஸ்வாசம்’ என்ன கதை?

தேனி மாவட்டத்துல கொடுவிலார்பட்டி கிராமத்துல நடக்கிற கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ள வெள்ளந்தியாகவும் வாழ்ற மனுஷங்களோட உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் ‘விஸ்வாசம்’ கதை. மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, மதினின்னு எல்லோருமே கூட்டுக் குடும்பமா வாழ்றாங்க. அப்படி அந்தக் கிராமத்து மக்களோட அன்பையும், உறவுகளுக்குள்ள ஏற்படுகிற சிக்கல்களையும் படம் பேசுது.

‘விஸ்வாசம்’ படத்தை உங்க கேமரா வழியாதான் நாங்க பார்க்கப் போறோம்... படத்துல எப்படி இருக்கிறார் அஜித்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE