இர.அகிலன்
தற்காப்புக் கலைஞர், மிஸ் இந்தியா எமிரேட்ஸ் கிரீடம், ஓவியர், ஃபிட்னஸ் பயிற்சியாளர், ஹெச்ஆர் பட்டதாரி, யோகா மாஸ்டர்... என நிவேதா பெத்துராஜின் புரொஃபைல் முழுக்க அத்தனை அழகாய் நிரம்பியிருக்கிறது. காமதேனு பேட்டிக்காக நேரம் ஒதுக்கியிருந்தவர் “ஸாரி... ரொம்ப லேட்டாயிடுச்சா” என்று அசத்தும் அழகில் வந்தமர்கிறார் நிவேதா. அழகு தமிழில் ஆரம்பமானது பேட்டி!
துபாயில் வளர்ந்தாலும் தமிழ் இவ்வளவு சரளமா பேசுறீங்களே..?
வளர்ந்ததுதாங்க துபாய். பிறந்ததெல்லாம் மதுரைப் பக்கம்தான். நடிப்புங்கறது என்னோட ரொம்ப நாள் கனவு. ஆனா, அதுக்காக நான் அவசரப்படலை. தமிழ்லதான் அறிமுகமாகணும்னு காத்திருந்தேன். இப்போ பெயர் சொல்ற மாதிரியான படங்கள் வந்திருக்கு. துபாய்லயும் வீட்ல எப்பவுமே நாங்க தமிழ்ல தான் பேசுவோம். அதனால இயல்பாவே தமிழ் நல்லா பேசவும், எழுதவும் வருது.