வழக்கமான ஹீரோயினா நடிக்க விரும்பல!- ஹன்சிகா மோத்வானி

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

மழை வருமா வராதா என்று வானிலை மையமும், வெதர் மேனும் பந்தயம் கட்டிக்கொண்டிருந்த நாளின் பிற்பகல் பொழுது... சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் அழகுப் புயல் ஹன்சிகா ஹாயாக வந்திறங்குகிறார். முன்பொருமுறை நேரில் பார்த்தபோது கொழுக்மொழுக் என்றிருந்த ஹன்சிகா, இப்போது கிலோ கணக்கில் கணிசமாக எடை குறைந்து ஸ்லிம் சிண்ட்ரெல்லாவாக மாறியிருக்கிறார்.
 என்னாச்சு ஹன்ஸ்.. அநியாயத்துக்கு இளச்சுட்டீங்களே? என்றபடியே பேட்டியை ஆரம்பித்தேன்.

(முறைத்தபடியே...) ஆமாம். ரொம்ப எடை கூடிக்கிட்டே போறீங்கன்னு நீங்க தான் போன பட ஷூட்டிங்ல சொன்னீங்க. எடை குறைஞ்சா, என்னாச்சுன்னு விசாரிக்கறீங்க. இப்படி எடையைக் குறைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்னை வெச்சி எவ்ளோ மீம்ஸ் கிரியேட் பண்ணி இருக்காங்க தெரியுமா? கொஞ்சம் சதை போட்டிருந்தோம்னா பப்ளிமாஸ்னு நக்கல் அடிக்கிறாங்க. உடம்பைக் குறைச்சோம்னா, ‘ஏன் இப்படி ஆயிட்டீங்க’ன்னு உங்களை மாதிரியே கேட்குறாங்க. நான் எப்படி இருக்கணும்னு நீங்கள்லாம் எதிர்ப்பார்க்கிறீங்கன்னே தெரியலை. உடம்பைத்தான் குறைச்சிருக்கேன். கன்னமெல்லாம் அதே பழைய ஹன்சிகாதான். என்னை இளைக்க வெச்ச சாதனையில்  நடிகரும், டாக்டருமான சேதுவுக்குப் பெரிய  பங்குண்டு. அவர்தான் ஆபரேஷன் இல்லாமலேயே ஒல்லியாகும் ‘ஸ்கூல் ஸ்கல்ப்ட்டிங்’ என்கிற மருத்துவ முறை மூலமாக என்னை இப்படி மற்றியவர். ஆனா, எப்படிக் குறைச்சேன், எவ்வளவு செலவாச்சுன்னு எல்லாம் கேட்காதீங்க; அது சீக்ரெட்! என்னோட அம்மா, டாக்டர் மோனா மோத்வானிக்கும் இதுல கொஞ்சூண்டு பங்கிருக்கு.

இப்போவெல்லாம் சினிமாவுல ஒரு ஹீரோயின்  10 படங்கள்ல நடிச்சாலே சாதனைதான். நீங்க 50-வது படத்தை எட்டிட்டீங்களே..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE