இரண்டிலுமே  நான் சக்சஸ்!   -  குஷியில் ‘குக்கரி’ மீனாட்சி

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

‘‘சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி யாகவும் ஒரே சமயத்தில் சக்சஸ் கொடுப்பது சவால்தான். இந்த இரண்டிலும் நான் ‘குட்புக்’கில் இருப்பது ரொம்பவே ஹேப்பியா இருக்கு!’’ என்கிறார் மீனாட்சி.

விஜய் டிவி-யில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரை முடித்துவிட்டு புதுயுகம் தொலைக்காட்சி ‘ருசிக்கலாம் வாங்க’ குக்கரி நிகழ்ச்சியை 500-வது அத்தியாயம் நோக்கி நகர்த்திச் செல்லும் மீனாட்சியிடம் ஒரு தேநீர் இடவேளையில் பேசினேன்.

சின்னத் திரையில் சமையல் நிகழ்ச்சிக்குன்னு தனியான ஒரு மாஸ் இருக்கத்தான் செய்யுது இல்லையா?

கண்டிப்பா... ஒரு நிகழ்ச்சியை நாம எப்படி பிரதிபலிக்கிறோம் என்பதில்தான் அதோட முழுமையான ரீச் இருக்கு. அதுவும் சமையல்னா எல்லோருக்கும் பிடிச்ச விஷயமாச்சே. இப்போ நான் தொகுத்து வழங்கிக்கிட்டிருக்குற ‘ருசிக்கலாம் வாங்க’ ஷோ, யூ டியூப் வழியே மலேசியா, ஆஸ்திரேலியான்னு வெளிநாட்டுல வசிக்கிற தமிழர்களாலும் கொண்டாடப்படுது. குறிப்பா, “மீனாட்சி உங்களோட தமிழ் உச்சரிப்பு இந்த நிகழ்ச்சியை இன்னும் அழகா மாத்துது”ன்னு பாராட்டுறாங்க. இதைக் கேக்குறப்ப சந்தோஷமா இருக்கும். நவராத்திரி, கார்த்திகை ஸ்பெஷல், அடுத்து கிறிஸ்துமஸ்னு சீசனுக்கு ஏற்ற மாதிரி உணவுகளை வகைப்படுத்துறோம். வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

குக்கரி நிகழ்ச்சித் தொகுப்பாளினி, ஆன்மிகத் தொடர், கிளாசிக் சீரியல்னு சும்மா... புகுந்து கட்டி அடிக்கிறீங்களே?
நான் அடிப்படையில் கிளாசிகல் டான்சர். அதுதான் என்னோட நடிப்பு கேரியருக்கு பெரிய பலமே. அந்த பலம் ஒண்ணுதான் எல்லாத்துலயும் நாம தடம் பதிக்கலாம்கிற நம்பிக்கையையும் கொடுக்குது.

இப்பெல்லாம் சீரியல்களில் ‘இவருக்கு பதில் இவர்’ கலாச்சாரம் அதிகரித்து வருகிறதே. நீங்கள் அதுமாதிரியான சூழலை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

ஆமாம். இப்போ ரொம்பவே அதிகரிச்சுடுச்சுன்னே சொல்லலாம். பொதுவாக ஒரு சீரியல்ல ‘இவருக்கு பதில் இவர்’ எனக் கதாபாத்திரம் மாறுதல் நடப்பதற்கு மூணு விஷயங்கள்தான் முக்கியக் காரணம். ஒன்று நடிகர், நடிகைகளோட சொந்தக் காரணம், அடுத்து அந்தந்த சீரியல் குழுவோடு நடிப்பவர்களுக்கு செட் ஆகாதது, மூணாவது குறிப்பிட்ட சீரியலின் மேலாளர் பிரச்சினையாக இருக்கலாம். இது சீரியல் பார்ப்பவர் களுக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படி மாறும் கதாபாத்திரம் 90 சதவீதம் பழைய ஃபீலைக் கொடுப்பதில்லை. சில நேரத்துல அப்படி மாறும் கதாபாத்திரம் அச்சு அசலா பொருந்திடுவாங்க. ஆனா, இதுவரைக்கும் எனக்கு அது மாதிரியான அனுபவங்கள் ஏதும் ஏற்படல!

விஜய் டிவி-யில் ராதா - கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE