கலகல கஸ்தூரியின் ‘சக்சஸ் சரித்திரங்கள்’

By காமதேனு

இர.அகிலன்

‘சர்கார்’ சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்த நாளின் மதியப் பொழுதில், நடிகை கஸ்தூரியைச் சந்திக்கலாம் என்று நுங்கம்பாக்கத்திற்குச் சென்றிருந்தேன். எதைப் பற்றிக் கேட்டாலும் பவுன்ஸர்களாக விளாசுகிற கஸ்தூரி கலகல கஸ்தூரியாய் மாறி விஜய் டிவி-யின் ‘சக்சஸ் சரித்திரங்களு’க்காக ரெடி, டேக், ஆக்‌ஷனுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசினேன்.

“என் வீட்ல டிவி கிடையாது. ஏதாவது முக்கியமான நிகழ்ச்சியைப் பார்க்கணும்னா ஆன்லைன்ல பார்த்துப்பேன். இந்தியா வந்ததுக்கப்புறமா டிவி அவசியம்னு நினைச்சு வெச்சிருந்தேன். அப்புறம் கடுப்பாகி எடுத்து வெச்சுட்டேன். வெரைட்டிக்காக ஏதாவது ஒரு சேனலைத் திருப்பினா, யார் எந்த கள்ளப் புருஷனோட போனாங்கன்னு பஞ்சாயத்துப் பண்ணிக்கிட்டிருக்காங்க. இன்னொரு சேனலைத் திருப்பினா, ‘கிராமத்தில் ஒரு நாள்’ அப்படின்னு ஒரு கொடுமை. வேற ஒரு சேனல்ல அரசியல் அக்கப்போர். இப்படி எல்லாமே மனதை ரணமாக்குற அல்லது குப்பையாக்குற மாதிரியான நிகழ்ச்சிகளா இருக்கு. அப்படி இல்லைன்னா அருவருப்பான நிகழ்ச்சிகளா இருக்கு. தன்னம்பிக்கை தர்ற மாதிரியான பாஸிட்டிவ் விஷயங்கள் தமிழ் தொலைக்காட்சிகள்ல வர்றதில்லை.

வம்பு பேசுறதும் புறணி பேசுறதும்தான் நம்ம தமிழ்நாட்டோட மிகப் பாப்புலரான ஷோக்களாக இருக்கு. இதைப் பாக்குறவங்க தமிழ்நாட்ல எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்களோன்னு நினைப்பாங்க. அடுத்தவர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு, மாமியாரைப் பழிவாங்கத் துடிக்கும் மருமகள், நாத்தனார் சீரழியணும்னு நினைக்கிறவங்க - இதுமாதிரியான நிகழ்ச்சிகளை ரசிச்சுப் பார்க்கிற ஒரு கெட்ட பழக்கத்துக்கு தமிழ்நாடு மாறிடுச்சோன்னு நினைக்கத் தோணுது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE