ஒரு காமெடியனுக்குப் பின்னால்... நாஞ்சில் விஜயன் நடந்து வந்த பாதை

By காமதேனு

என்.சுவாமிநாதன்

“மழையில் நடப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஏனென்றால் மழையில் நாம் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாதே...’’ உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் தனக்குள் கிடந்த சோகத்தை இப்படிச் சொன்னார். இது நாஞ்சில் விஜயனுக்கும் பொருந்தும்!

விஜய் டிவி-யின் எவர்க்ரீன் காமெடி பெர்ஃபார்மர் நாஞ்சில் விஜயன். அதிலும், பெண் வேடமிட்டு இவர் செய்யும் அலப்பறைகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது மற்றவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயனின் ஆரம்ப நாட்கள் வலிகளும், வேதனைகளும் நிரம்பியவை. 

விஜயனுக்குச் சொந்த ஊர் நாகர்கோவில். அப்பா ஹோட்டலில் மாஸ்டர். அம்மா இல்லத்தரசி. ஒரு தம்பி, ஒரு தங்கை இதுதான் இவரது குடும்பம். எல்லோருக்கும் போல விஜயனுக்கும் பால்ய நாட்கள் பசுமையாகத்தான் நகர்ந்தன. அம்மா இறந்த பிறகுதான் அத்தனை சோகங்களும் அப்பிக்கொண்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE