நான் இன்னொரு ஜெயலலிதா - ‘சர்கார்' வரலட்சுமி சடார் பேட்டி!

By காமதேனு

கா.இசக்கி முத்து

33 வயது என்பது நாயகிகளுக்கு வாய்ப்புக் குறையும் காலம். வரலட்சுமி சரத்குமாரோ, கொடி கட்டிப் பறக்கிறார். ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘சண்டக்கோழி’யைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரம் அவருக்கு. திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி, துணிந்து முடிவெடுக்கும் தைரியசாலியான அவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.

கதாநாயகியைவிட, குணசித்திர வேடங்களில் ஆர்வம் காட்டுவது போலத் தெரிகிறதே?

ஏன் என்று தெரியவில்லை. பலரும் இதே கேள்வியைக் கேட்கிறீர்கள். நான் யார்? ஒரு நடிகை. நடிக்கத்தானே வந்தேன்? இப்படித்தான் நடிக்க வேண்டும், இந்தக் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்கணும் என்றெல்லாம் முடிவு செய்துவிட்டு வந்தவள் அல்ல.  நடிக்க வேண்டும். அதற்கு எந்த ரூபத்தில் தடை வந்தாலும் அதைத்
தாண்டி நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குறிப்பாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு விரும்புவேன். அப்படி பல படங்களில் நடித்தும் வருகி றேன். நாயகிகள் சில ஆண்டுகள் இருப்பார்கள், பின்பு காணாமல் போய்விடுவார்கள். நல்ல கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிச்சுக்கிட்டே இருக்கலாம். ‘சர்கார்’ படத்திலும் நான் நாயகி அல்ல. ஆனால், வலுவான கதாபாத்திரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE