இப்ப்டிக்கு ‘ஃபர்ஸ்ட் மேன்..!’

By காமதேனு

ந.வினோத் குமார்

“‘ஹூஸ்டன். ட்ராங்குவிலிட்டி பேஸ் ஹியர். தி ஈகிள் ஹேஸ் லேண்டட்!’

நான், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் சென்ற அப்போலோ 11 விண்கலம் நிலவில் இறங்கியதும் நான் பூமிக்குச் சொன்ன வார்த்தைகள் இவை!

விண்வெளியை யார் வெற்றிகொள்வது என்ற போட்டி, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே நடந்து வருகிறது. பூமிக்கு வெளியே சென்று விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்தது முதலில் ரஷ்யர்கள்தான். அந்நாட்டின் யூரி காகரினும், அவருக்குப் பிறகு வாலண்டினா டெரஸ்கோவாவும் அந்தச் சாதனையைச் செய்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE