சண்டக்கோழி 2 - விமர்சனம்

By காமதேனு

வெளிநாட்டிலிருந்து வரும் மகன், தனது அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் ‘சண்டக்கோழி 2.’

திருவிழாவில் நடந்த கறிவிருந்து தகராறு கொலையில் முடிய, பதிலுக்கு வரலட்சுமியின் (பேச்சி) கணவர் கொல்லப்படுகிறார். அதற்குக் காரணமானவர்களின் வம்சத்தையே கருவறுக்க வரலட்சுமி சபதமெடுக்க, ஒரே நாளில் டஜன் கணக்கில் கொலை விழுகிறது. கடைசியாக ஒரே ஒரு உயிர் மட்டும் எஞ்சியிருக்க, அதைக் காப்பாற்றுவதாக வாக்குக்கொடுக்கிறார் ஊர்ப்பெரியவர் துரை அய்யா(ராஜ்கிரண்). 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோயில் திருவிழா வருகிறது. அந்தத் தலை உருண்டதா, இல்லை அப்பாவுக்குக் கொடுத்த வாக்கின்படி அந்தத் தலையைக் காப்பாற்றினாரா நாயகன் விஷால் (பாலு) என்பதுதான் திரைக்கதை.

படத்தின் கதையும் கதைக்களமும் திருவிழாதான். எனவே படத்தின் கதையோட்டம், திருவிழாவையும் திருவிழாவைச் சுற்றியுமே நடக்கிறது. படம் முழுவதுமே திருவிழாவை கான்செப்ட்டாக வைத்திருந்தாலும் கூடவே அந்த அன்பு எனும் ஐஏஎஸ் மாணவனைக் காப்பாற்ற செய்யும் டெம்போவையும் ஏற்றி, கமர்ஷியல் கவரேஜ் செய்திருக்கிறார் லிங்குசாமி.

ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் விஷால். 13 வருஷத்துக்கு முன்பு இருந்ததுபோல உடற்கட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால், முதல் காட்சியிலேயே தன் நிஜ அரசியல் ஆசையை திரையில் வெளிப்படுத்துவது அபத்தமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE